
கோலாலம்பூர் செப் 13-
பக்கவாத நோயினால் அவதியுறும் சுரேஷ் ஆறுமுகத்திற்கு சோட்டானிக்கரா பகவதி அம்மன் இயக்கத்தின் சார்பில் நேற்று சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
பகவதி அம்மன் இயக்கத்தின் தலைவர் மகேஸ்வரி அவர்கள் ரவாங்கில் சுரேஷ் இல்லத்திற்கு நேரடியாக சென்று நலம் விசாரித்து சக்கர நாற்காலியை அன்பளிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இருதய நோயாளியான சுரேஷ் திடீரென பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் மகேஸ்வரியிடம் தெரிவித்தனர்.
புக்கிட் செந்தோசா,ரவாங்கை சேர்ந்த இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதை கேள்வியுற்று தாம் உதவி கரம் நீட்டியதாக அவர் சொன்னார்.
இதனிடையே இலவசமாக சக்கர நாற்காலி தேவைப்படுவோர் 0123922947 என்ற எண்ணில் தம்மை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

