கோபியோவின் இந்திய வம்சாவளி பெருவிழா! கலை கலாச்சாரத்தையும் வர்த்தகத்தையும் ஊக்குவிக்க உதவுகிறது! அமைச்சர் கோபிந்த் சிங் பெருமிதம்

செ.வே.முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் செப் 16-
கோபியோவின் PIO புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளி பெருவிழா கலை கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்க உதவுகிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 2ஆவது ஆண்டாக அவ்விழா பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவை, டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ குத்து விளக்கு ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினரின் கலைக் கலாச்சார பரிமாற்றத்துக்கும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த கோபியோ இந்திய வம்சாவளி பெருவிழா துணைப் புரிகிறது என்றார்.

இந்த விழாவின் அடிப்படை நோக்கமே, கலை கலாச்சாரம், சரித்திரம் மற்றும் நம் முன்னோர்கள் எதிர்நோக்கிய சவால்கள், அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை நினைவுக் கூர்ந்து கௌரவிப்பதாகும் என்று அவர் சொன்னார்.

கோபியோ தலைவர் குணா தமது உரையில் அனைத்துலக இந்திய வம்சாவளி பெருவிழா வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றியை புலப்படுத்திக் கொண்டார்.

செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது என்றார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles