தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதி ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது!

ஈப்போ செப் 16-
பேரா , தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதியில் எழுந்தருளியுள்ள அருள் மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (16-9-24) திங்கட் கிழமை ஆலயத்தின் மகா சிறப்புடன் நடைபெற்றது.

சுமார் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் இது மூன்றாவது மகா கும்பாபிஷேகமாகும்.

இவ்விலாய கும்பாபிஷக விழாவைக்காண பெரும் திரளானோர் கலந்துக்கொண்டனர்.

யாக சாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர் கும்பங்கள் ஆலய வலம் கொண்டு செல்லப்பட்டு காலை 10. 15 மணியளவில் கோபுரத்தில் பின்னர் புனித நீர் ஊற்றப்பட்டது பின்னர் ஆலயத்தில வீற்றிருக்கும் ஸ்ரீ முருகன், விநாயகர் , ஸ்ரீ காசி விஸ்வநாதனர, மற்றும் ஏனைய பரிவார மூரத்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஒரு காலத்தில் ரப்பர் தோட்டமாக இருந்த இந்த இடத்தில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டு இருந்தது.

பின்னர் கடந்த 1988 ஆம் ஆண்டு மேம்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்த தோட்டத்தில் இருந்த இந்த ஆலயத்திற்கு மாற்று இடமாக தற்பொழுதுள்ள இந்த இடம் ஒதுகீடு செய்யப்பட்டது .

சிறியதாக இருந்த இந்த ஆலயமாக படிபடியாக சீரமைக்கப்பட்டு தற்பொழுது பெரிய ஆலயமாக உருமாறி இந்த சுற்றுவட்டாரத்தில பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது.

இந்த ஆலயத்தில் தைப்பூச விழா பிரதான விழாவாகவும் மற்றும் சிவராத்திரி விழா உடபட பல விஷேசமாக பூஜைகளும் நடைபெற்ற வருவதாக ஆலயத் தலைவர் எஸ்.ராஜேந்திரன கூறினார்

சுமார் 3 லட்சம் வெள்ளி செலவில் சீரமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலய வளரச்சிக்கு பொது மக்களும் அரசாங்கமும் நல்லாராதவும் வழங்கி வருகிறார்கள்

இந்த ஆலயத்தில் கோபுரத்தில் 35 ஆடி உயரத்தில் அமைக்கப பட்ட ‘ வேல்’ பலரின. கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது்

இவ்விழாவில் உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராப்பாட் ,மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசனின் சிறப்பு அதிகாரி உ.. முத்துசாமி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்

இந்த மகா கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஆலயத் தலைவர் எஸ். ராஜேந்திரன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த விழாவில் கலந்துக்கொண்ட முகமட் அராபாட், செய்தியாளர்களிடம் பேசியபோது , இந்த ஆலயம் ஆற்றோரத்தில் அமைந்துள்ளது. இதனால் ஆற்றின் மண் அரிப்பினால் ஆலயத்திற்கு பாதிப்பு வரும் என்று ஆலய நிர்வாகம் தம்மிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து மண் அரிப்பை தவிர்க்க சுமார் ஒரு லட்சம் வெள்ளி செலவில் தடுப்பு நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த வட்டாரத்தில் உள்ள ஆலயம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles