பிரிம் இயக்கத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது!

ஈப்போ செப் 16-
பேராக் மாநில அளவிலான மௌலிதுர் ரசூல் விழாவில்
பேரா இந்திய முஸ்லிம்( பிரிம்) மௌலிதுர் ரசூல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனை அந்த இயக்கதின் தலைவர் முகமது அரிப் அலியா பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷாவிடமிருந்து அந்த விருதைப் பெற்றார்.

பரிசு தொகை வெ. 5,000 ரொக்கப் சான்றிதழுடன் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த நிகழ்வு மேரு கேசுவரினா ஹோட்டலில் இன்று நடை பெற்றது .

விருதை பெற்றுக்கொண்ட முகமது அரிப் கடவுளுக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இந்த விருதைப் பெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்

கடவுள் நாடினால், சமூகத்திற்கு உதவும் வகையில் அதிகமான பணிகளைச் செய்து வருகிறது. இது எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அதிக ஊக்கத்தை அளிக்கும்,” என்று அவர் கூறினார்.

தமது இயக்கம் இதுவரை பல. சமுக நல உதவுகளை வழங்கி வருவதுடன் வசதி குறைந்த மக்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கு உதவுவதுடன் வீட்டுக்கு வீடு மார்க்க நடவடிக்கைகளும் அதில் அடங்கும்.

சங்கத்தின் மற்ற செயல் நடவடிக்கைக்கும் , மார்க்க சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இரண்டு கடைவீடுகளை பிரிம் வாங்கியுள்ளது.

எங்கள் நடவடிக்கைகளில் அன்னையர் தினம், தந்தையர் தினம், கருத்தரங்குகள் மற்றும் மாணவர்களுக்கானகௌரவிக்கப்பட்டவிழாக்கள் ஆகியவை அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles