நிர்த்திய ஜோதி நடனப் பள்ளி மாணவிகளின் அரங்கேற்றமும் சலங்கை. பூஜையும் சிறப்புடன் நடைபெற்றது

ஈப்போ செப் 17-
பேரா மாநிலத்தில் பல ஆண்டுகள் சிறப்புடன் இயங்கி வரும் நிர்த்திய ஜோதி நாட்டியப் பள்ளியில் பரதம் பயின்று வந்த ஸ்ரீ மதி தமிழரசி முனியாண்டி,( tamilarasi muniandy),ஸ்ரீ மதி சபிதா சாலோனி மணிராஜா( sabita saalonee) குமாரி ரேவதி தம்பிதுரை( revathi tambithurai) குமாரி , லிவினியாஸ்வரி காளிதாசன்( livininyaswary kalithasan) ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த மாணவிகளின் அரங்கேற்றம் நடைபெற்ற வேளையில் இந்த நடனப்பள்ளியில் நடனம் பயின்று வரும் மாணவி தோஜேஸ்ரி புவனேஸ்வரனின் ( tojeshree puvaneswaran) சலங்கை பூஜையும் நடைபெற்றது.

ஈப்போவில் உள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை கண்டு களிக்க பெரும் திரளானோர கலந்துக் கொண்டனர்.

இந்த நாட்டியப் பள்ளி அதன் ஆசிரியை இரத்தன உமா மனோகரன் தலைமையில் சிறப்புடன் இயங்கி வருகிறது .

இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை அளித்த ஈப்போ மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் தலைமை தாங்கினார்.

நிகழ.வில் அவர் ஆற்றிய உரையில், பாவம், ராகம் தாளம் ஆகிய மூன்றின் சங்கமமே, பரதம் . தெய்வத்தின் வாழ்க்கையை நடனத்தால் சித்தரிக்க பரதம் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

அந்த வகையில் இங்கு நடைபெற்ற இந்த நால்வரின் அறங்கேற்றமும் , மாணவி ஒருவரின் சலங்கை பூஜையும் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகது.

மக்களுன் வாழ்க்கை கூறுகளை அவர்தம் எண்ணங்களை பிரதிபலிப்பதில் கலையானது தலையாய இடத்தை வகிக்கின்றது பரம் என்றும் டாக்டர் ஜெயபாலன் பேசினார்.

கலையின் அறிய பிரிவுகளில் ஒன்றே நாட்டியம், இந்தியர்களின் பண்பாட்டு நாகரீகத்தை உலகிற்கு பறை சாற்றுவதில் நடனக் கலை் பெரும் பங்காற்றுகிறது.இந்த கலை மென்மேலும் வாழ வளர நமது பங்களிப்பு அவசியாகும் என்று வலியுறுத்திய அவர் பல மேடை நாட்டிய நிகழ்வுகளை படைத்து இன்னமும் தொடர்ந்து சிறப்புடன் பரதக் கலையை வளர்த்து வரும் இரத்தன உமா மனோகரனுக்கு ‘ நாட்டிய நாடக வித்தகி’ எனும் விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த நடனப்பள்ளி பேராவில் பல இடங்களில நடத்தி வருவதாகவும்
இந்த கலையை கற்க பலர் ஆர்வத்துடன் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கலை வளர பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் என்று நடனப் பள்ளியின் ஆசிரியை இரத்தன உமா மனோகரன் கூறினார்.

இங்கு நடைபெற்ற அரங்கேற்ற நிகழ்வில். திருமணம் ஆன இரு மகளிர்கள் அரங்கேற்றம் கண்டுள்ளனர்.

நடனக் கல்வி கற்பதற்கு வயது தடையில் எந்த வயதிலும் அதனை பயிலளாம் . அதற்கு அவ்விருவரும எடுத்துக்காட்டு என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles