

யூபிஎம், செப் 18-
செர்டாங் யூபிஎம் பூமாலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமானப் பணிக்கு 50,000 ரிங்கிட் நிதியாக வழங்கப்பட்டது.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ இன் இந்நிதியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய கட்டுமான பணிக்கு நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்நிதி ஆலயம் கட்டும் பணியை முடிக்க கோவிலின் தற்போதைய முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூகக் கடப்பாட்டின் அடிப்படையில் இந்நிதி வழங்கப்பட்டது.
மேலும் ஆலயக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதில் இந்த நிதி முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

