
கோலாலம்பூர்: செப் 17-
இந்தியாவின் புகழ்பெற்ற முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா இப்போது கோலாலம்பூர் – புதுடில்லி இடையிலான தினசரி, புதிய இடைவிடா விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை டில்லியிலிருந்து பயணிகளுடன் கேஎல்ஐஏ வந்திறங்கிய முதல் விமானத்திற்கு பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏர் இந்தியா தனது இப்புதிய வழித்தடத்திற்காக ஏர்பஸ் ஏ320நியோ விமானத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் ஏர் இந்தியா இதன் மூலம் தனது இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
கோலாலம்பூருக்கு ஏர் இந்தியாவின் சேவை இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகளுக்கு புதிய விமான விருப்பத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

