



ஈப்போ செப் 17-
ஈப்போ , வரலாற்றுப் பூர்வ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நபிகள் நாயம் பிறந்தநாளை முன்னிட்டு மீலாது விழா ஊர்வலம் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
இந்த ஆண்டு எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
இப்பள்ளி வாசலின் தலைவர் ஷெக் முஜூபூர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்ந ஊர்வலத்தில மற்ற மாவட்டங்களில் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசலின் பொறுப்பாளர்கள கலந்துக்கொண்டனர்
இந்த ஊர்லம் நிகழ்வு மாலை நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த ஆண்டு காலையில் நடத்தபட்டது .
அதில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டது மகிழச்சியை ஏற்படுத்துவதாக ஷெக் முஜூபூர் ரஹ்மான் கூறினார்.
பள்ளிவாசலில் தொடங்கிய இந்த ஊர்வலம் நகர் மத்திய பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தது என்றார்.
இனி வரும் காலங்களில் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டதுடன் இந்த விழா சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

