
மாஸ்கோ: செப் 18-
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.
இந்த பிரச்னை ஒருபுறமிக்க, இதை விட பெரிய பிரச்னையாக நாட்டின் மக்கள் தொகை மிக வேகமாக சரிந்து வருவது அதிபர் புடின் அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை பிறப்பு விகிதம் 1999க்குப் பிறகு மிகவும் குறைந்துள்ளது. தற்போது ரஷ்ய பெண்களின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1 குழந்தை என்ற கட்டத்தை எட்டியிருக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க அதிபர் புடினும் மக்களை ஊக்கப்படுத்தி உள்ளார்.
இதற்காக 24 வயதுக்கு உட்பட்ட பெண்களின் முதல் குழந்தைக்கு 8,500 பவுண்ட் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்புக்கான அணுகலை தடுக்க வேண்டும், விவகாரத்து கட்டணம் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளும் சில மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன .

