
சிரம்பான் செப் 19-
நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெறவிற்கும் இந்த சந்திப்பு கூட்டங்கள் “மக்களுக்காக நேசா, நேசாவிற்காக மக்கள்” என்ற கருப்பொருளோடு நடைபெறும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர்களுக்காக வட்டாரக் கூட்டங்களை நடத்தி பேராளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், நேசா உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளையும் அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து அதற்கேற்ப செயல்படும் புதிய அணுகு முறையை நேசா இயக்குனர் வாரியம் செயல்படுத்த முனைந்துள்ளது.
இந்த சந்திப்பு கூட்டத்தில் நேசா திட்டங்கள் குறித்த தகவல்களை நேசா உறுப்பினர்கள் நேசா வாரியத் தலைவரிடமிருந்தும் இயக்குனர்களிடமிருந்தும் நேரடியாக அறிந்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
குறிப்பாக உறுப்பினர்களின் தகவல்கள், அவர்கள் வாரிசு நியமனம் செய்ய வேண்டியதன் அவசியம், உறுப்பினர்களின் வங்கி விவரங்களை புதுப்பிப்பது, போன்ற உதவிகளும் ஆலோசனைகளும் இந்த சந்திப்பு கூட்டத்தில் வழங்கப்படும்.
இந்த சந்திப்பு கூட்டங்களை பயன்படுத்தி நேசா கூட்டுறவு கழகத்தில் பங்கு பணம் வைத்திருப்பவர்கள் தங்களின் வாரிசு நியமனங்களை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த சந்திப்பு தொடரின் முதல் கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 21 செப்டம்பர் 2024, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் நேரத்தின் விவரங்கள்:
1.*இடம்:
- ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் – 71300, ரெம்பாவ், நெகிரி செம்பிலான்.
நேரம்: - காலை 9.45 – காலை 11.15
- இடம்:*
- எண்.1, ஜாலான் நேசா டெலிமா 1, தாமான் நேசா டெலிமா, 71200 ரந்தாவ், நெகிரி செம்பிலான்.
நேரம்: - காலை 11.45 – மதியம் 1.15
- இடம்:*
- எண்.31/A, ஜாலான் பிஎஸ்.எஸ் 1/3A, பாண்டார் சிரம்பான் சிலத்தான், 71450 எஸ்.ஜி காடுட், நெகிரி செம்பிலான்.
நேரம்: - மதியம் 2.00 – மதியம் 3.30
4.*இடம்:
- கிரிஷ் செல்லப்பன் & கோ – எண்.99-22A, ஜாலான் ஹருவான் 5/4, ஓக்லாந்த் காமர்சியல் ஸ்க்வேர், 70300, சிரம்பான், நெகிரி செம்பிலான்.
நேரம்: - மாலை 3.45 – மாலை 5.15
இதன் தொடர்பான விளக்கங்கள் வேண்டுவோர் கீழ்காணும் நேசா அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்:
தொலைபேசி: 03-40415488
கைப்பேசி: 012-7005024

