டத்தோ விருது பெற்ற டிரா மலேசிய தலைவர் சரவணனுக்கு பாராட்டு விழா!

காளிதாஸ் சுப்ரமணியம்

புக்கிட் பெருந்தோங், செப் 21-

தன்னலம் கருதாமல் மக்களுக்கு அளப்பரிய சேவைகளை வழங்கி வரும் டிரா மலேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் டத்தோ விருது பெற்றதை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

உலு சிலாங்கூர் Gerak Malaysia இயக்கத்தின் தலைவர் ரவி முனியாண்டி ஏற்பாட்டில் புக்கிட் பெருந்தோங்கில் அமைந்துள்ள பிரபல சீன உணவகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவுக்கு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தலைமை ஏற்றார்.

குடியுரிமை இல்லாமல் நாடற்ற பிரஜைகளாக வாழ்ந்த ஏராளமான மக்களுக்கு டிரா மலேசிய மூலம் குடியுரிமை பெற்று தந்த பெருமை டத்தோ சரவணன் சின்னப்பனைச் சாரும்.

இவரின் அளப்பரிய சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்த நாளில் அவருக்கு டத்தோ எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.

கடந்த 2010 ஆண்டு தொடங்கி உலுப்சிலாங்கூரில் பிறப்புப் பத்திரம் பிரஜா உரிமம் இல்லமால் தவித்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு டத்தோ சரவணனின் சேவை மூலம் நன்மை நடந்துள்ளது உண்மை என்றே சொல்ல வேண்டும் என்றார் ரவி.

டத்தோ சரவணனின் இந்த அளப்பரிய சேவைகளுக்கு நன்றி செலுத்தும் எண்ணத்திலும் அவருக்கு கிடைத்திருக்கும் உயரிய விருதுக்கு பாராட்டும் வகையிலும் இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பதாக ரவி கூறினார்.

இந்த விருதை வழங்கிய பினாங்கு மாநில அரசுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ரவி முனியாண்டி தெரிவித்தார்.

மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, உலுசிலாங்கூரின் இயக்கங்களின் தலைவர்களும் இளைஞர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles