அனைவரையும் அரவணைத்து மலேசிய தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தை சிறந்த முறையில் வழி நடத்துவேன்! தலைவர் முத்தமிழ் மன்னன் அறிவிப்பு

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் செப் 21-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட செ.வே.முத்தமிழ்மன்னன் தெரிவித்தார்.

அனைவரும் ஒரே குடும்பமாக இருந்து ஒற்றுமையாக செயல்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

எனது தலைமைத்துவத்தில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சிறந்து விளங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

உறுப்பினர்களின் நலன் காக்கும் வகையில் செயலவை அனுமதியோடு திட்டங்களை மேற்கொள்வோம்.

குறிப்பாக சங்கத்திற்கு ஒரு வலுவான நிதியை திரட்டும் வகையில் செயல் திட்டங்களை வகுப்போம்.

சங்கம் மீண்டும் எழுச்சி பாதையில் பயணிக்கும் என்று அவர் உறுதி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles