வெளிமாநில தமிழ் பத்திரிகையாளர்கள் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தில் இடம் பெறுவார்கள்!

கோலாலம்பூர் செப் 21-
வெளி மாநிலங்களில் பணிபுரியும் தமிழ் பத்திரிகையாளர்கள் இனிமேல் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தில் இடம் பெறுவார்கள் என்று சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

தற்போது குறைந்த அளவில் மட்டுமே வெளிமாநில தமிழ் பத்திரிகைகள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

எங்களையும் சங்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று வெளிமாநில தமிழ் பத்திரிகையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர்கள் கோரிக்கை மிகவும் நியாயமானது என்பதால் இனி வரும் காலங்களில் அவர்களும் சங்கத்தில் உறுப்பியம் பெறுவார்கள்.

மேலும் தமிழ் பத்திரிகைகளில் பணிபுரியும் இலங்கை மற்றும் தமிழக தொழிலாளர்களும் மலேசியத் தமிழ் பத்திரிகை சங்கத்தில் மீண்டும் இணைத்துக் கொள்வோம் என்று அவர் சொன்னார்.

இன்று குயில் ஜெயபக்தி மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles