முத்தமிழ் முருகன் மாநாட்டில் கணினி தமிழ் உருமாற்றத்தை கொண்டு வந்தது!

ஈப்போ, செப்.22- அண்மையில் முத்தமிழ் முருகன் மாநாடு முதல்முதலாக தமிழ்நாட்டில் பழனியில் தமிழ்நாட்டு அரசின் ஆதரவில் நடந்தேறியது.

இம்மாநாட்டில் மலேசியாவை பிரதிநிதித்து பேராளர்கள் கலந்துக்கொண்டனர்.

அந்த வரலாற்றுப்பூர்வ மாநாட்டில் தமக்கு” கந்தபுராணக் கச்சியப்பர்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதாக பேராசிரியர் டாக்டர் வ.ஜெயபாலன் கூறினார்.

இந்தக் கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா முதல்முறையாக தமிழகத்தின் பழனியில் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் முருகனின் மாநாடு குறித்த கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்வை டத்தோ செல்லையா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியைக் கூறிக்கொண்டார்.

இந்த மாநாட்டில் கணினி தமிழ் வாயிலாக ஆறுபடை வீடுகளுக்கும் பேராளர்கள் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 ஆயிரம் பேராளர்கள் கலந்துக்கொண்ட இம்மாநாடு தமிழக அறநிலைத்துறை அமைச்சர் மோகன் பாபு தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வேளையில் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கருணாநிதிக்கும் நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இயல் இசை நாடகம் என்ற அடிப்படையில் இம்மாநாடு சிறப்பாக வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி, பேராளர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் மதிப்பும் மரியாதையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

அத்துடன் தம்முடன் வருகையளித்த 24 முருக பேராளர்கள் மூன்று படை வீடுகளுக்கு வழிபாடு செய்ய அழைத்து செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் ஈப்போவை சேர்ந்த முருகன் பக்தர்களுடன் கோலாலம்பூர் முருக பக்தர்களும் இணைந்துக்கொண்டனர்.

இந்த முருகன் மாநாட்டில் 4, 000 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அத்துடன், 6 தீர்மானமங்கள்
முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

. அவற்றில் ஒன்று முருகனின் இலக்கிய படைப்புகளின் ஆய்வு மையம் பழனியில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகப்பேறு மருத்துவர் வ.ஜெயபாலன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles