
கோலாலம்பூர், செப் 22 – சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் உறுப்பினர் ஒருவரால் சாட்டையால் அடிக்கப்படும் ஒரு சிறுவன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ” ஒப் குளோபல் ஃபேஸ் 4”ன் வழி நேற்று மீட்கப்பட்ட 186 பேரில் அடங்குவார்.
தீபகற்பத்தில் உள்ள 82 வளாகங்களில் ஒரே நேரத்தில் 102 சிறுவர்கள் மற்றும் 84 சிறுமிகள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கை அதிகாலை சோதனையின் போது நடைபெற்றதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.
நலன்புரி இல்லங்கள், வணிக வளாகங்கள், கிளினிக்குகள், மதப் பள்ளிகள் மற்றும் தனியார் வீடுகள் உள்ளிட்ட GISB- புடன் தொடர்பு படுத்தப்பட்ட வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 155 சந்தேக நபர்கள் – 78 ஆண்கள் மற்றும் 77 பெண்கள் – கைது செய்யப் பட்டதாக அவர் கூறினார்.

