
பத்து காஜா,செப்23: மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேலோங்க செய்திட சமூக நிகழ்ச்சிகள் பெரும் பங்காற்றுவதாக கூறிய பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் அத்தகைய சூழல் உருவாக ஒவ்வொரு சமூக அமைப்பும் பொது இயக்கங்களும் முன் வர வேண்டும் என்றார்.
அவ்வகையில்,சிலிபின் ருக்குன் தேதாங்கா தொடர்ந்து பல்லின சமூகத்தின் மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வலுவாக கட்டமைக்க சமூக நிலையிலான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அதன் செயல்பாடுகளை வெகுவாகவும் பாராட்டினார்.
அதுமட்டுமின்றி,பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வை மேலோங்க செய்யவும் அது வலுபெறவும் சுகாதாரமும் பாதுகாப்பும் ஒரு மையப்புள்ளி என்பதை உணர்த்தும் வகையில் இன்றைய நிகழ்ச்சி அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,மலேசியா மடானி கொள்கைக்கு ஒப்ப பல்லின மக்களிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஆட்கொள்ளவும் நாம் மலேசியர் என்னும் உன்னத சிந்தனையை விதைக்கவும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நனிச் சிறந்த பங்களிப்பை செய்வதாவகவும் அவர் மேலும் கூறினார்.
சிலிபின் ருக்குன் தெதாங்காவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பு என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு சிவகுமார் அவ்வியக்கம் தொடர்ந்து சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஆக்க்ப்பூர்வமாக முன்னெடுக்க வெ.5000 மானியமாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர் நம்மிடையே இதுநாள் வரை உயிர்கொண்டிருக்கும் மலேசியர் என்னும் உயரிய சிந்தனையும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் நமது அடுத்தத் தலைமுறைக்கும் விதைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

