மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் தேசிய முன்னணியை ஆதரிப்பார்கள்! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு

குழுவாங் செப் 23-
ஜொகூர் மாநில மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள் என்று
மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் சைட் ஹுசைன் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் மொத்தம் 66,318 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8 விழுக்காடு இந்தியர்கள்.

இத்தொகுதியில் உள்ள இந்திய சமூகம் நீண்ட காலமாக தேசிய முன்னணியை ஆதரித்து வருகின்றனர்.

அந்த வகையில் இம்முறையும் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு பிளவு படாத ஆதரவை வழங்குவார்கள் என்று அவர் சொன்னார்.

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு தேசிய முன்னணிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles