மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களுடன் தகவல் தொடர்பு துறை அமைச்சின் அதிகாரிகள் நேரடி சந்திப்பு!

காளிதாஸ் சுப்ரமணியம்

புத்ரா ஜெயா, செப் 23-
தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் அவர்களின் உத்தரவுக்கு இணங்க முதன்மை பத்திரிகை செயலாளர் புவான் ஹனிம் மற்றும் அமைச்சரின் தொடர்பு துறை அதிகாரி டத்தோ சிவபாலன் அவர்களுடன் இன்று மலேசியா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை நல்ல பயனாக அமைந்தது

சங்கத்தின் நிதி நிலைமை, அலுவலகம், ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர், பணியாளர்களுக்கு சிறப்பு நிதி, குடும்ப தின விழா, சிறப்பு மானியம் உட்பட பத்து கோரிக்கை குறித்து பேசப்பட்டது.

சங்கத்திற்கு எந்த வகையில் உதவிகள் வழங்க முடியும் என்பது குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல பதிலை வழங்குவதாக புவான் ஹனிம் தெரிவித்தார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், உதவித் தலைவர் காளிதாசன், ரவி முனியாண்டி ,செயலாளர் வெற்றி விக்டர், துணை செயலாளர் குணா, ஆட்சிக் குழு உறுப்பினர்களான காளிதாஸ் சுப்ரமணியம், இராமன் குட்டி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் SKIM HAWANA வாயிலாக மலேசிய தமிழ் பத்திரிகையில் உடல் நல குறைவால் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ,அமைச்சர் நேரடியாக வருகை தந்து உதவி நிதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்..

அமைச்சின் வாயிலாக மீடியா தொழிநுட்ப பயிற்சி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்

நிருபர், புகைப்பட கலைஞர்களுக்கு சிறப்பு பெட்ரோல் சலுகை அட்டை, நல்ல திட்டம் அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்கிறோம் என்று புவான் ஹனிம் பதில் கொடுத்தனர்.

இதனிடையே சங்கத்திற்கு வருடா வருடம் ஒரு சிறப்பு நிதி வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது

சங்கத்தின் செயலவை எடுத்துள்ள இந்த முயற்சி அடுத்த கட்ட கூட்டத்தில் அமைச்சர் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில் ஒரு நல்ல அறிவிப்பு கிடைக்கும் என நம்புவோம் என்று சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles