4 மனைவிகள் – 34 பிள்ளைகள்! ஆனால் பிள்ளைகளின் பெயர் தெரியாது!

கோலாலம்பூர்: செப் 24
குளோபல் இக்வானில் மக்களை ஏமாற்றி நிதி பெறுவதற்காக குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளனர் என்று போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் இன்று அம்பலப்படுத்தினார்.,

குளோபல் இக்வான் கீழ் செயல்பட்ட சமூக இல்லங்கள் மக்களிடம் இருந்து நிதி பெறுவதற்காக அனாதை இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

சமூக இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் அனாதைகள் என்றும் அவர்களின் பெற்றோரைத் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

போலிசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இல்லங்களைச் சேர்ந்த குறிப்பாக 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் தங்களின் பெற்றோரரை அறியாதவர்களாக உள்ளனர்.

நாங்கள் மீட்ட குழந்தைகளின் பெற்றோரும் உள்ளனர். அவர்களும் தற்போது போலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவருக்கு நான்கு மனைவிகள். 34 பிள்ளைகள்.

ஆனால் அவருக்கு தனது பிள்ளைகளின் பெயர் கூட தெரியவில்லை என்று விசாரணை மூலம் தெரிய வந்திருப்பதாக அவர் சொன்னார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles