மக்கோத்தா இடைத் தேர்தல் – தவறாது வாக்களிக்க வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

குளுவாங், செப். 24- வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 28)
நடைபெறவிருக்கும் மக்கோத்தா தொகுதி இடைத் தேர்தலில் தவறாது
கலந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும்படி தொகுதி
வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக
இருப்பதற்கு எதுவாக முடிந்த அளவு அனைவரும் வாக்களிக்க வருமாறு
தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் கூறினார்.

நெங்கிரி இடைத் தேர்தலில் (கிளந்தான் மாநிலத்தில் கடந்த மாதம்
நடைபெற்ற இடைத் தேர்தல்) எழுபது விழுக்காட்டு வாக்காளர்கள்
வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.

இந்த இடைத் தேர்தலிலும் அதிக
விழுக்காட்டு வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். முடிந்த வரை
அதிகப்பட்ச வாக்குப் பதிவு எங்களின் இலக்காக உள்ளது என்றார் அவர்.

இன்று முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெற்ற இடங்களை அவர் பார்வையிட்டார். 

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles