உலக தூய்மை தினத்தை முன்னிட்டுரவாங் கம்போங் ராஜா வில் கோத்தோங் ரோயோங் சிறப்பாக நடைபெற்றது!

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங் செப் 26-
செப்டம்பர் 21 முதல் 28 வரை, உலகத் தூய்மை வார்த்தை முன்னிட்டு ரவாங் கம்போங் ராஜா வில் கோத்தோங் ரோயோங் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ரவாங் சட்டமன்ற உறுப்பினர் YB சுவா வெய் கியாட், செலயாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

செலாயாங் நகராண்மைக் கழக கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் திரு கைரில் அன்வர் மற்றும் கம்போங் ராஜாவின் தலைவர் மில்டன் நியோ இந்த நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ததற்கு செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சூ தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

கம்போங் ராஜா பகுதியின் தூய்மையே சமூகத்தின் ஆரோக்கியத்தின் முக்கிய அடிப்படையாகும்.

அனைத்து குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இங்கு சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார் கவுன்சிலர் எலிஸ்.

தமக்கு கிடைத்த மனுவின் படி ஒரு மாதகாலகட்டத்திலேயே இங்கு புதியதாக குப்பை அறையை கட்டியிருப்பதாக எலிஸ் கூறினார்.

இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய செலாயாங் நகராண்மைக் கழக Kejurteraan துறைக்கு நன்றி கூறினார் கவுன்சிலர் எலிஸ்.

இரண்டு நாளில் ஏற்பாடு செய்திருந்தபோதிலும் இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட குடியிருபாளர்களும் செலாயாங் நகராண்மைக் கழக பணியாளர்களும் கலந்து கொண்டது தமக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles