எம் ஏசிசி விசாரணையில் அரசின் தலையீடு என்ற கூற்றுகள் ஆதாரமற்றவை !

கோலாலம்பூர், செப் 28– முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, அவரது மகன்கள் மற்றும் துன் டைம் ஜைனுடின் ஆகியோர் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணையில் தற்போதைய அரசாங்கம் தலையிடுவதாக கூறுவது அடிப்படையற்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.

மேலும் மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதென நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முஹம்மது கமில் அப்துல் முனிம் குறிப்பிட்டுள்ளார்.

அவர், ஊழல் தடுப்பு வாரியம் மகாதீரின் மகன்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பிரதமரின் தலையீடு என்ற ப்ரி மலேசியா இணைய பத்திரிக்கையின் கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக அவ்வாறு கூறியிருந்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles