காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர்: செப் 29-
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 16 ஆண்டுக்கால போராட்டங்கள் மிகவும் சவாலானது என்கிறார் அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் தனேந்திரன்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது பேராளர் மாநாடு இன்று கோலாலம்பூர் பசிபிக் ஹோட்டலில் நடைபெற்றது..
இந்த மாநாட்டில் உரையாற்றிய அவர்
இந்த 16ஆண்டுக்கால பயணம் என்பது சாதாரணமானது அல்ல. பல போராட்டங்களை நாங்கள் சந்தித்து வருகிறோம்.
மஇகாவுக்கு அடுத்து அதிக இந்திய உறுப்பினர்களை கொண்ட வலுவான கட்சியாக மக்கள் சக்தி கட்சி விளங்குகிறது.
இதற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சியின் விசுவாசம் தான் முக்கிய காரணமாக உள்ளது.
இனி வரும் காலங்களில்
எங்களின் போராட்டம் தொடரும் என்று அவர் சொன்னார்.