
கோலாலம்பூர், செப்.29-
தேசிய முன்னணியுடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் மக்கள் சக்தி கட்சிக்கான செனட்டர் பதவி கோரிக்கையை தேசிய முன்னணி தலைவரிடம் கொண்டு செல்வேன் என தேமுவின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்ரி தெரிவித்தார்.
மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டது முதல் தேசிய முன்னணியுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களின் விசுவாசத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது மாநாட்டில் அவர் கூறினார்.
மேலும் மக்கள் சக்தியின் கோரிக்கைக்கு இணங்க தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சியாக மக்கள் சக்தியை இணைப்பது தொடர்பில் தற்போது உள்ள உறுப்புக்கட்சிகளுடனும் தேமு தலைமைத்துவத்துடனும் கலந்து பேசப்படும் என டத்தோஸ்ரீ ஷம்ரி தெரிவித்தார்.

