டத்தோஸ்ரீ சரவணன் மட்டுமே வெற்றி பெற்றார்! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட 8 பேர் தோல்வி

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ம இகா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ எம் சரவணன் கடுமையான போட்டிக்கு இடையே வெற்றி பெற்றுள்ளார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தெலுக் இந்தானில் டத்தோ முருகையா, பத்துவில் கோகிலன் பிள்ளை, உலு சிலாங்கூரில் டத்தோ மோகன், போர்ட் டிக்சனில் கமலநாதன் ஆகியோர் தோல்வி கண்டுள்ளனர்.

கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் மோகனா முனியாண்டி, சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் டான்ஸ்ரீ இராமசாமி ஆகியோரும் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles