புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான எம்பிக்கள் ஆதரவு உள்ளது!
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

எனது தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்

நடந்து முடிந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 82 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி சாதனைப் படைத்தது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு 112 எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது.
எங்களை ஆதரிக்கும் எம்பிக்கள் யார் என்பதை இப்போதைக்கு அறிவிக்க விரும்பவில்லை.

நாளை ஒரு நல்ல செய்தி நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

பக்கத்தான் ஹரப்பான் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 112 எம்பிக்கள் ஆதரவு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles