
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட எஸ் கேசவன் 1,846 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவருக்கு மொத்தம் 21,637 வாக்குகள் கிடைத்தன.
தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் 19,791 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ இருதயநாதன் 8,190 வாக்குகள் பெற்றார்.
கடந்த தேர்தலில் ம இகா வேட்பாளர் டத்தோ தேவமணியை வீழ்த்திய கேசவன் இம்முறை ம இகா தேசிய தலைவரை வீழ்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

