
ஈப்போ, அக்.4-
பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி நேற்று மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட் அவர்களுடன் மரியாதை நிமித்த சந்திப்பினை மேற்கொண்டார்.
இச்சந்திப்பில் டான்ஸ்ரீ தமது தலைமையிலான மாநில ம.இ.காவின் செயல்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வரிடம் விளக்கமளித்தார்.
அத்துடன் பேராக் மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
கட்சியை வலுப்படுத்தி, சமுதாயத்துடன் அணுக்கமான உறவினை மேம்படுத்தும் பேராக் மாநில ம.இ.காவின் நடவடிக்கைகளை மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சாராணி பெரிதும் வரவேற்றார்.
தேசிய முன்னணி தோழமை உணர்வுடன் மாநில ம.இ.காவின் செயல்திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் உறுதி கூறினார்.

