டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்பது உறுதி!
தேசிய முன்னணி – பக்கத்தான் தலைவர்கள் முக்கிய சந்திப்பு

நாடே எதிர்பார்க்கும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்பது உறுதி என்று வர்ணிக்கப்படும் வேளையில் பக்கத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இப்போது முக்கிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

புத்ரா உலக வாணிப மையத்தில் அருகில் உள்ள ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் இப்போது இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தேசிய முன்னணி சார்பில் 30 பேர் வெற்றி பெற்றனர்.

இன்றைய கூட்டத்தில் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் 27 எம்பிக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதன் வழி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles