
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 4-
மலேசிய இந்தியர்களின் கூட்டுறவு கழகங்களின் மாநாடு வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பேங் ராக்யாட் மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
மலேசியாவில் இப்படியொரு மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியர்கள் சம்பந்தப்பட்ட 400 க்கும் மேற்பட்ட கழகங்கள் மட்டுமே உள்ளது.
கூட்டுறவு கழகங்கள் முலமாக இந்திய தொழில் முனைவோருக்கு உதவ வேண்டும் என்ற இலக்கில் இந்த மாநாடு திருப்பு முனையாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
நாட்டில் உள்ள இந்திய கூட்டுறவு கழகங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் இந்த மாநாடுவழி வகுக்கும்.
இந்த கூட்டுறவு மாநாட்டை முன்னிட்டு இன்று மாநாட்டின் சின்னத்தை டத்தோஸ்ரீ இரமணன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சிறு தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சு பல வகைகளில் உதவி வருகிறது.
ஸ்கூமி பெண் தொழில் முனைவோர் திட்டம், அமனா இக்தியார் மலேசிய, தெங்குன், பேங் ராக்யாட் மற்றும் இ- வேப் திட்டம் வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.