மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்குபத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் 10,000 வெள்ளி மானியம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 5-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்க பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன் தலைமையிலான செயலவை உறுப்பினர்களுடன்
மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவரும் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் நேற்று முக்கிய சந்திப்பு நடத்தினார்.

*சங்கத்தின் செயல்பாடுகளுக்காக பிரபாகரன் தமது நாடாளுமன்ற நிதியிலிருந்து 10,000 ரிங்கிட்டை கூடிய விரைவில் வழங்குவதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மித்ராவின் மானியம் பெறுவதற்கான செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக மலேசிய தமிழ் பத்திரிகை துறையில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சங்கத்தின் ஆலோசகரும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜூவும் கலந்து கொண்டார்.

அண்மையில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்தமிழ் மன்னன் மற்றும் டத்தோ டாக்டர் செல்வராஜ் ஆகியோரை பிரபாகரன் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles