பிரதமரின் பாகிஸ்தான் பயணத்தின் வழி மலேசியாவுக்கு வெ.265 கோடி வர்த்தக வாய்ப்புகள்!

இஸ்லாமாபாத், அக். 5- பாகிஸ்தானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட மூன்று நாள் அரசாங்க வருகையின் பயனாக 265 கோடி வெள்ளி மதிப்புள்ள வர்த்தக வாய்ப்புகளை மலேசியாபெற்றுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.

மலேசியாவிலிருந்து செம்பனை இறக்குமதியை அதிகரிப்பதற்கும், மரத்தளவாடங்கள், உரம், பெட்ரோகெமிக்கல் மற்றும் ஒலியோகெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் அந்நாடு உறுதியளித்துள்ளதாக அவர் சொன்னார்.

பிரதமரின் பாகிஸ்தான் நாட்டிற்கான இந்த அரசாங்க வருகை ஹலால் தொழில்துறையில் பத்து கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீட்டுக் கடப்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.

இந்த திட்டம் அடுத்த மூன்றாண்டுகளில் அமலாக்கம் காணும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமரின் மூன்று நாள் பயணத்தின் இறுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர்
சந்திப்பின் தெங்கு ஸப்ருள் இந்த விபரங்களை வெளியிட்டார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles