புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில்
மிக விரைவில்
முடிவு செய்வேன்!
மாட்சிமை தங்கிய மாமன்னர் அறிவிப்பு

மத்திய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் மிக விரைவில் முடிவு செய்வேன் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா தெரிவித்தார்.

நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். நாம் நேசிக்கும் இந்த நாடு முன்னேற வேண்டும்.

ஆகவே இந்த விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கப் போவதாக மாமன்னர் தெரிவித்தார்

தேர்தல் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொண்டு பொறுமை காக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

நடந்து முடிந்த நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 82 இடங்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது.

அதே சமயம் பெரிக்கத்தான் நேஷனல் 73 இடங்களை பிடித்தது. தேசிய முன்னணிக்கு 30 இடங்கள் கிடைத்தன.

இப்போது ஆட்சி அமைப்பதில் பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியாக பக்கத்தான் ஹரப்பான் விளங்குவதால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று மலேசியர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles