சமூக வலைத்தளங்கள் மூலம்
அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்!
போலீஸ் படை தலைவர் எச்சரிக்கை

மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான சினமூட்டும் கருத்துகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயலும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா இன்று கடுமையாக எச்சரித்தார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த 15வது பொதுத் தேர்தல் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles