
நடந்து முடிந்த நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட மூன்று இந்திய பெண்கள் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட துள்சி மனோகரன் அமோக வெற்றி பெற்றார்.
அதேபோல் மாநிம் நவார் சட்டமன்ற தொகுதியில் பவானி பாசா , ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் வேட்பாளர் வசந்தி சின்னசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பேராக் மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று இந்திய பெண்கள் அதாவது பக்கத்தான் ஹரப்பான் சார்பில் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
சுங்கை சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் சிவநேசன் மற்றும் உலு கிந்தா சட்டமன்ற தொகுதியில் அரபாட் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இம்முறை பேராக் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஐந்து இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

