
ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை என்று ஐபிஎப் கட்சி இளைஞர் பிரிவு தலைவர் கணேஸ் சம்பந்தன் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் போன ஐபிஎப் கட்சி என்ற ஆடு காணாவில்லை என்று இணையத் தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
32 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமை படுகிறோம்.
ஜெலுத்தோங்கில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் போட்டியிட்டு ஐபிஎப் கட்சி தலைவர் டத்தோ லோகநாதன் 8,000 வாக்குகள் பெற்றிருப்பது பெரும் சாதனையாகும் என்று அவர் சொன்னார்

