
அம்னோ தலைவர் பதவியில் இருந்தும் தேசிய முன்னணி தலைவர் பதவியில் இருந்தும் விலக வில்லை என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார்.
இவ்விரு பதவிகளில் இருந்து நான் விலகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியில் உண்மை இல்லை.
யாரும் நிலைமையை மோசமாக வேண்டாம். இது பொறுப்பற்ற தரப்பினர்கள் செய்த சதி வேலையாகும்.
இப்போது நாடு நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

