
பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மோகிதீன் யாசின் பிரதமராக வருவதற்கு ஆதரவு வழங்கிய பத்து அம்னோ எம்பிக்கள் இப்போது தங்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதாக பரபரப்பாக கூறப்படுகிறது.
மோகிதீனுக்கு ஆதரவை மீட்டுக் கொண்டதாக பத்து அம்னோ எம்பிக்கள் இஸ்தானாவுக்கு இ மெயில் மூலம் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இதன் வழி டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் 115 எம்பிக்கள் ஆதரவை இழந்து விட்டது என்று கூறப்படுகிறது.

