ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும்படி மாமன்னர் கேட்டுக் கொண்டார்! டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் விளக்கம்!

நாட்டின் 10 ஆவது பிரதமராக யார் பதவி ஏற்பார் என்ற பரபரப்பு உச்சக் கட்டத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில் எல்லா அரசியல் கட்சி தலைவர்களை மாட்சிமை தங்கிய மாமன்னர் சந்தித்து வருகிறார்.

நேற்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் மொகிதீனை சந்தித்தார்.

இன்று காலையில் 10.40 மணிக்கு மேல் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், தலைமை செயலாளர் ஸம்ரி அப்துல் காடீர் ஆகியோர் மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும்படி மாமன்னர் கேட்டுக் கொண்டதாக டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

மாமன்னர் விடுத்த பரிந்துரையை பரிசீலிக்க இன்றிரவு தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டம் கூடுவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles