
கெடா பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நாளை கூலிமில் நடைபெறுகிறது.
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் கருப்பையா முத்துசாமி நவம்பர் 14 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து பாடாங் செராய் வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை வேட்புமனு தாக்கலும் டிசம்பர் 7 ஆம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்றிரவு 9.00 மணிக்கு கூலிமில் அறிவிக்கப்படுகிறார்.
தேசிய முன்னணி சார்பில் டத்தோ சிவராஜ் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

