செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்று வரும் நவராத்திரி விழா!

கோலாலம்பூர் அக் 8-
நாட்டில் புகழ்பெற்ற கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் ஏற்பாட்டில்
நவராத்திரி விழா செந்தூல் தண்டாயுதபாணி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 51 ஆம் ஆண்டாக இந்த நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13 ஆம் வரை இந்த நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுகிறது என்று கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி. சேகர் என்ற சுப்ரமணியம் தெரிவித்தார்.

நேற்று ஐந்தாம் நாள் நவராத்திரி விழா உபயத்தை மலேசிய இந்தியர் சிறு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் குடும்பத்தினர் ஏற்று நடத்தினர்.

நவராத்திரி விழாவுடன் தஞ்சை கமலா இந்திரா நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டிய நடனங்கள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

வரும் அக்டோபர் 12 ஆம் தேதி சனிக்கிழமை திருக்கல்யாணம் இடம் பெறுகிறது.

அதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் திருவீதி உலா உற்சவம் நடைபெறுகிறது என்று சேகர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் துணை தலைவர் டாக்டர் தேவிகா, செயலாளர் அமரேசன், பொருளாளர் கண்ணன மற்றும் இயக்கத்தின் இதர பொறுப்பாளர்கள் முயற்சியால் இவ்வாண்டு நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தொடர்ந்து நடைபெறும நவராத்திரி விழாவில் பொதுமக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு தரும் படி சேகர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles