ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்: காஷ்மீரிலும் காங்.கூட்டணி முன்னிலை

டெல்லி: அக் 8-
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலையில் தொடங்கியது.

இதில் தொடக்கம் முதலே இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

அந்த வகையில் ஹரியானாவை பொறுத்தவரை ஆட்சி அமைக்க தேவையான 46 இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங். கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் ஹரியானாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஹரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதேபோல ஜம்மு-காஷ்மீரிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தனித்து போட்டியிட்ட மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles