தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஆசிய எச்ஆர்டி விருது குழு சார்பில் வழங்கி பிறப்பிக்கப்பட்டது

சென்னை: அக் 8-
மனிதவள மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய மனிதவள மேலாண்மைக் கழகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆசிய எச்ஆர்டி விருதுக்குழு தலைவருமான ஃபாமி ஜோவ்தர், மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதியும் விருதுக்குழு துணைத் தலைவருமான முகமது வஹீத் ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாய மேம்பாட்டுக்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும், விடா முயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக, ஆசிய எச்ஆர்டி விருதுகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ஆசிய எச்ஆர்டி விருதுகள் நிறுவனரும், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான டான்ஸ்ரீ டத்தோ பாலன், துணைவேந்தர் டேவிட் விட்போர்டு, மலேசியா எஸ்எம்ஆர்டி ஹோல்டிங்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் மஹா ராமநாதன், முன்னாள் மனிதவள மேலாண்மைக் கழக முதன்மை தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ விக்கி, ஆசிய எச்ஆர்டி விருதுகள் தலைமை செயல் அலுவலர் சுப்ரா, கே.ஏ.மேத்யூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து டான்ஸ்ரீ டத்தோ பாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவில் 12 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

முன்னதாக, பிலிப்பைன்ஸ் அதிபர் பிடல் வி.ராமோஸ், போஸ்னியா பிரதமர் ஹாரிஸ் டால்சுவேக், மலேசியா நாட்டின் சராவக் முதல்வர் Pehin Sri Haji Abdul Taib Mahmud போன்ற பல தலைவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் என்னென்ன முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து இந்த விருதை வழங்கியுள்ளோம்.

முதலாவதாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்துள்ளனர்.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

கல்வி, மனிதவள மேம்பாடுதான் வறுமையை ஒழிக்கும் என்பதில் இக்குழு நம்பிக்கையை கொண்டுள்ளது.

இதற்காக முதல்வருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. என்று டான்ஸ்ரீ பாலன் பெருமையுடன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles