டான்ஸ்ரீ் எம்.இராமசாமி ம இ கா வின் தேசிய உதவித்தலைவராக நியமனம்!

ஈப்போ, அக்.8-
பேராக் மாநில ம இ கா தலைவர் டான்ஸ்ரீ எம். இராமசாமி தேசிய உதவித்தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பேராக் மாநில ம இ கா வின் செயலாளர் கோ.சண்முகவேலு மாநில ம இ கா சார்பில் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இந்த நியமனம் பேராக் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்.இவ்வேளையில் ம இ கா வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோருக்கு பேராக் ம இ கா தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, இன்று( 9.10.2024) பேராக் ம இ கா வின் நியமனப் பதவிகள் குறித்து மாநிலத்தலைவரும், உதவித்தலைவருமான டான்ஸ்ரீ எம். இராமசாமி அறிவிப்பு செய்யவுள்ளார். பேராக் மாநிலத்தலைவர் தேசிய உதவித்தலைவராக நியமனம் செய்யபட்டதற்கு ஒட்டுமொத்த பேராக் ம இ கா வினர் மகிழ்ச்சிகரமாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles