பிறை, அக் 8-
இளம் கால்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கும் படலத்தில் பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கம் மற்றும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் களம் இறங்கி உள்ளது.
அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் கரூடா கிராஸ்ரூட் கிண்ண கால்பந்து போட்டியை உருவாக்கி உள்ளது.
மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின் (MIFA) உதவித் தலைவர் மற்றும் பினாங்கு இந்திய கால்பந்து சங்கத்தின் (PIFA) தலைவர் பிரேம்குமார், கடந்த சனிக்கிழமை கருடா கிராஸ்ரூட்ஸ் கிண்ண கால்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து ஆதரவு வழங்கினார்.
கருடா எஃப் சி குறிப்பிடத்தக்க செயல் திறனுக்காகவும், இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்த சகோதரர் ஹரிஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வரவிருக்கும் MIFA போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான பாதையை உருவாக்கும் நோக்கத்துடன், MIFA செயற்கைக்கோள் திட்டம் போன்ற கட்டமைக்கப்பட்ட திட்டங்களின் மூலம் இளம் திறமைகளை
கால்பந்து விளையாட்டாளர்களை உருவாக்குவதே எங்களது இலக்கு என்று பினாங்கு இந்தியன் கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
மலேசிய கால்பந்து துறைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் இலக்கில் இளம் கால்பந்து விளையாட்டாளர்கள் மூலம் சாதிக்க முடியும் என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
கரூடா கிராஸ்ரூட் கிண்ண கால்பந்து போட்டியில் அதிகமான இளம் விளையாட்டாளர்கள் கலந்து கொண்டது பெரும் உற்சாகத்தை தருகிறது என்றார் அவர்.