
அம்பாங் வட்டார ஆலயங்களின் ஒன்று கூடும் நிகழ்வு
இம்மாதம் 20ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு தாசேக் அம்பாங் பெர்மாய்,
ஆதி சங்கர் மடத்தில் நடைபெறவுள்ளது.
மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ. பாப்பராய்டு தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில்
தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் யீ ஜியா ஹார் கலந்து
கொள்ளவிருக்கிறார்.
இந்த ஒன்று கூடும் நிகழ்வில் அரசின் மானியங்களுக்கு இணையம் வழி
விண்ணப்பம் செய்வது தொடர்பான வழிமுறைகள், விபரங்கள் மற்றும்
நிபந்தனைகள் குறித்து பாப்பாராய்டுவின் கொள்கை ஆலோசகர் சேகு
ஆனந்த் ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கமளிப்பார்.
மேலும், இந்த நிகழ்வில் நகராண்மைக் கழகத்தின் அதிகாரம் (நகர்புற
திட்டமிடல் துறை கட்டிடம் மற்றம் கட்டிடக்கலை) தொடர்பிலும்
விளக்கங்கள் வழங்கப்படும்.
இந்த ஒன்று கூடும் நிகழ்வு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக
உறுப்பினர்களான ஆர்.மோகன் ராஜ், வி.நடேசன் மற்றும் தெராத்தாய்,
பண்டான் இண்டா, புக்கிட் அந்தாராபங்சா, லெம்பா ஜெயா தொகுதிகளின்
இந்திய சமூகத் தலைவர்களின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.