பேராக்கில் இவ்வாண்டில் டிங்கி காய்ச்சலால் 13 மரணங்கள்-ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் தகவல்

ஈப்போ, அக்.11-
பேராக் எபிட் வாரம் 40/2024 வரை டிங்கி காய்ச்சலால் இறந்த மற்றொரு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்நோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 13 ஆக பேராக் மாநிலம் கொண்டுள்ளது.

மனித வளங்கள், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் பேராக் தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஆட்சிக்குழு அ. சிவநேசன் கூறுகையில் சமீபத்திய மரணம் கிந்தா மாவட்டத்தில் உள்ள தாமான் விங் ஓன் பகுதியில் 46 வயதுடைய நபர் என்று கூறினார்.

இறப்புகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் அதே எபிட் வாரத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் 5,956 பேர் டிங்கி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே காலப்பகுதியில் 2,864 பேர், 3,092 பேர் என 108 சதவீதம் அதிகரித்துள்ளது என்று உங்கு உமர் பாலிடெக்னிக் பேராக் ஜூபிலி ஹாலில் உலக மனநல தினத்தை தொடக்கி வைத்நபோது கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles