
ஈப்போ அக் 11-
சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியில் பேராவை பிரதிநிதித்துச் சென்ற சிலம்பம் குழு ஆறு தங்கம் இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்று சாதனை படைத்தது.
பேராவை பிரதிநிதித்துச் சென்ற குழுக்களில் அதிக பதக்கங்களை வென்ற குழுவாக சிலம்பம் தேர்வு செய்யப்பட்டது குறித்து மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமட் வெகுவாக பாராட்டியதுடன் ்
அக்குழுவிற்கு வெ. 58, 500 வெகுமதியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் 35 தங்கம், 38 வெள்ளி மற்றும் 56 வெண்கலத்துடன் ஐந்தாவது இடத்தைப் பேரா பிடித்தது.
சுக்மாவில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை இன்று வழங்கப்பட்டது.
சிலம்பம் மற்றும் கபடி குழுவிற்கு தலைமையேற்றுச் சென்ற மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் இவ்விரு குழுவில் இடம் பெற்ற போட்டியாளர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி் பேராதவு வழங்கினார்.
இதனிடையே பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டாளர்களுக்கும் ஊக்கத் தொகையை டத்தோ ஸ்ரீ சாராணி முகமட் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், மூத்த மாநில அரசு அதிகாரிகள் பலரும் கலத்துக்கொண்டன்