லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் சிறப்பிக்கப்பட்டார்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 13-
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று இரவு நட்சத்திர இன்னிசை விழா விமரிசையாக நடைபெற்றது.

கடுமையான மழைக்கு இடையே நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் அழைப்பை ஏற்று சிறப்பு வருகை புரிந்த ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ சரவணனுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் இஸ்மாயில், செயலாளர் இராஜன் உட்பட அனைத்து பொறுப்பாளர்களும் இந்த விழாவை சிறப்பாக நடத்தினர்.

வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

முன்னதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இந்த விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடா வருடம் லெபோ அம்பாங் தீபாவளி கலைவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது பாராட்டுக்குரியது என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

தலைவர்கள் வரலாம் போகலாம். ஆனால் நாம் எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் இந்த விழா தங்கு தடையின்றி ஆண்டு தோறும் நடைபெற வேண்டும்.

நீங்கள் எல்லாம் மிகவும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles