லாஸ் ஏஞ்சல்ஸ்: அக் 15 –
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்சின் கோச்செல்லா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, காரில் வந்த 49 வயதான நபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அந்த நபர் பத்திரிகையாளர் என கூறியுள்ளார்.
ஆனால் அவரிடம் உரிய அடையாள அட்டை இல்லை.
அவரது காரில் குண்டுகள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தன.
உடனடியாக போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் அவன் லாஸ் வேகாசின் நிவாடா பகுதியைச் சேர்ந்த வெம் மில்லர் (49) என்பது தெரியவந்தது.
இவர், டிரம்ப்பை சுட்டுக் கொல்லும் திட்டத்துடன் வந்ததாக போலீசார் கூறி உள்ளனர்.
ஏற்கனவே அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப்பை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது.